வியாழன், ஜனவரி 24, 2013

மகா பூரணாதி .......சிவ தாண்டவம் -

மகா பூரணாதி .......சிவ தாண்டவம் -                                                     .                                                                                                                            பின் பக்கம்  பார்த்துக் கொண்டே ,முன் பக்கம்  நடப்பது  என்பது எவ்வளவு சிரமமோ ,அவ்வளவு சிரமம் -சித்தனையும் ,சித்த மருத்துவத்தையும் புரிந்து கொள்வது என்பது ......... எல்லா சித்தர்களும் தம் மொழி நடையில் ,ஒரு பொது மரபை வைத்திருந்தார்கள் -அதன் பேர் "சாடுதல் ",எல்லா விதமான வசவு சொற்களும் ,அவர்கள் பாடிய பாடல்களுக்கு இடையில் ,மிக சரளமாக வந்து கொண்டும் ,மனித நிலையில் ஏற்படும் எல்லா உடல் அனுபவங்களின் ,மன அனுபவங்களின் தொகுப்பாகவே அந்த எல்லா பாடல் சொற்களும் ,தமக்குள் உரையாடிக் கொண்டே  இருக்கும் -செயல்களையும் ,செய்கைகளையும் -தமிழ் சொல் வடிவில் ,மிக எளிமையாக ,மலர்களை  அள்ளி அள்ளி வீசுவது போல் ,வீசி விட்டு செல்வது அவர்களின் பணியாக இருந்திருப்பதை ,அவர்களின் பாடல்களை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடியும் ,தற்கால  தமிழ் கொலை களத்தில் ,அவர்களின் அறிவு மனம்  -மணம் வீசாமல் மலிந்து கிடப்பதற்கு ...............என்ன காரணம் என்று தெரிய வில்லை ...தொடர்ந்து பயணிப்போம் ........................................................................................................................................................................ 

செவ்வாய், நவம்பர் 01, 2011

குஷ்டம் போக்கும் -முருக கடவுள் தந்திரம் -அருணகிரி நாதருக்கு உபதேசித்தது !

பொதுவாகவே, சித்த மருத்துவ நண்பர்களுக்கும் ,யோகம் பயிலும் ஆன்மீக நண்பர்களுக்கும் , உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப் பற்றிய பாடங்கள் தெரிந்து இருக்கும் .ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் ,தமிழ் மொழியில்  ஒரு வித்து  சொல் கொடுக்க பட்டிருப்பதும் ,நாம் அறிந்ததே !ஆனால் தற்கால சித்த  மருத்துவர்கள் ,இந்த ஆதார வித்து சொற்களை ,தங்கள் மருத்துவ பயன் பாட்டிற்கு,பயன் படுத்துகிறார்களா !என்று பார்த்தோமானால்  இல்லை என்றே கூற வேண்டும் .நானும் அவ்வாறே தெரிந்து கொள்ளாத காலம் இருந்தது.மேற் கண்ட யோகம் ,ஸ்ரீ வித்யா  பூஜையின் போது ஏற்படும் அதிக அளவு வெப்ப தாக்குதலில் இருந்து ,மீள்வதற்காக என் குருவால் உபதேசிக்கப் பட்டது .                                                                                         உதரணமாக மூலாதாரத்திற்கு வித்து" நகாரம்" என்று நமக்கு  தெரியும் .இது ஒரு  மந்திரத்தால் (மந்திரம் -மனதின் திடம் ) செய்யக் கூடிய தந்திர யோகம் .மிக எளிமையானது .வயதானவர்களும் ,நோயாளிகளும் எளிதில் செய்யக் கூடிய ஒரு பயிற்சி .                                                                                                                           ஆறு ஆதாரங்களுக்கு தலைவனாக ,ஆறு முக கடவுளாக சித்தரித்து ,அவனுக்கு வடிவு தந்து ,எல்லா விஷய (சித்த மருத்துவமும் கூட ) ஞானத்தையும்  கொடுக்க கூடியவனாக ,உருவகப் படுத்தி ,மூன்றாவது கண் என்று சொல்லக் கூடிய பீனியல் சுரப்பி அமைந்திருக்கும் இடத்தில் அமர்த்தி ,அந்த சுரப்பி ,தன் சுரப்பை சுரந்து கொண்டு இருக்கும் வரை ,ஒவ்வொரு மனிதனும் குழந்தையாகவே இளமையோடு இருப்பான்! என்பதை உணர்துவதர்க்காகவே முருகனை  குழந்தையாகவே இருத்தி சென்ற சித்தர்களின் திருவிளையாடல்கள் எந்நே!                                                                                          """"""'சொல் அற-சும்மா இரு """"""""-இது அருணகிரி நாதருக்கு ,முருகன் உபதேசித்தது .எந்த நிலையில் உபதேசித்தார் தெரியுமா !அருணகிரி நாதர் காம வேட்கையினால் ,பல பெண்களுடன் களிப்புற்று ,அதன் விளைவாக உடல் முழுவதும் வெப்பு நோய் என்னும் குஷ்ட நோய் தாக்கி துன்புற்று ,மேலும் காம வேட்கை தீராமல் அலைந்த போது ,அருணகிரி நாதரின் மூத்த சகோதரி ,அவரின்  துன்பம் பொறுக்காமல் , தன்னையே உன் காம வேட்கைக்கு பயன் படுத்த கோரியது கேட்டு மனம் வெதும்பி  ,பஞ்ச பூத தலமாம் -தீ பூதத்தின் திருஅண்ணாமலை கோபுர உச்சியில் இருந்து விழும் போது ,உபதேசித்த சொற்கள் அவை .ஒரு ஒற்றுமையை பாருங்கள் .----------------முருகன் -பீனியல் சுரப்பி இடம் (சந்திர மண்டலம்),,அருணகிரிநாதர் -இருதயம் (சூரிய மண்டலம்),,நோய் -குஷ்டம் (வெப்பு நோய்கள் ,தோல் நோய்கள் ),நோய் காரணம் -வெப்ப (பித்த ) அதிகரிப்பு (காரண விழும் இடம் -தீ பூத திரு அண்ணாமலை )                                                                                                                                             தந்திரப்    பயிற்சி:--------------------------------------------------------------------------------------------------------------------------------"""சொல் அற"" -பேசாமல் இருத்தல் .எப்படி ?இங்கே ஒரு சூட்சும நிலை விளக்க படுகிறது .சாதாரண நிலையில் நமது நாக்கானது ,வாயை மூடிக் கொண்டு இருந்தாலும் ,சிறு அசைவுடன் இருக்கும் ,அப்பொழுது ஒலி அலைகள் உருவாகாமல் இருக்க முடியாது .ஆனால் அஸ்வினி முத்திரை என்று சொல்லக் கூடிய ,நாக்கை மேல் நோக்கி உள் மடக்கிய நிலையில் ,அந்த அசைவும் ,உமிழ் நீர் சுரத்தலும் தடுக்க படுவதால் ,ஒலி அலைகள் எழுவது கட்டுப் படுத்த படுகிறது .                                                                                                                             """"""""""""""""""""""""சும்மா இரு """-என்பதன் பயிற்சி நிலை -"சும்"''என்ற ஒலி அலைகளை ,சூரிய மண்டல நடுவில் ,மனதிற்குள்ளாக  உச்சரித்து கொண்டே இருத்தல் ஆகும் .                                                                                                                                       சூரிய மண்டலம் என்பது பற்றிய ஒரு செய்தி ,இந்த தந்திரத்தின் உண்மையை விளக்குவதற்காக இங்கே கூறப் படுகிறது .சிவ பூஜை செய்பவர்களுக்கும் ,சந்தியா வந்தனம் செய்பவர்களுக்கு தெரிந்த விஷயம் இது .                                                 சூரிய மண்டலம் பூஜை முறையில் -அகோர ஹிருதயாய நமக!என்று அந்த இடத்தில்,சுக்கிர விரல் (பெரு விரல்),சூரிய விரல் (மோதிர விரல் )இணைத்து  தொட்டு ,மந்திரம் (மனதின் திடம் )சொல்வார்கள் .கோரம்  என்றால் சிதைந்த என்று பொருள் .அகோரம் என்றால் அழகான என்று பொருள்                                                                              பயிற்சியின் விளைவுகள் :------------------------------------------------------------------------------------------------------*சும்  என்ற தமிழ் வித்து சொல் ஒளியை ,தியான முகமாக ,நெஞ்சின் நடுவில் சூரிய மண்டலத்தில் ,தொடர்ந்து எந்த ஒரு சிந்தனையும் இன்றி உச்சரிக்கும் போது ,*ஒலி சிதறல்கள்  தோன்றும் ,தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க ,ஒலி சிதறல்கள் விரியும் .அடுத்த அதி சூட்சும நிலை என்ன தெரியுமா !உங்கள் நாக்கானது,தானாகவே உள் இழுக்க தொடங்கும் .கண்கள் புருவ மத்தியை  நோக்கி இழுக்கப் படும் .உள் இழுக்க ,இழுக்க உங்கள் உள் நாக்கின் மேல் இருந்து சளி போன்ற  ஒரு பொருள் ,கீழிறங்க ஆரம்பிக்கும் .இது நிகழ ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பொறுமையாக இருத்தல் வேண்டும் .இந்த நிலையில் உங்கள் தாடை பகுதியிலிருந்தும் ,சில சுரப்புகள் வழிய ஆரம்பிக்கும் .இவை எல்லாமே சூரிய மண்டலத்தால் உறிஞ்சி கொள்வதை உணர்வீர்கள் .                                                                                                                                       இந்த யோகதிலிருது அருணகிரி நாதர் விழிக்கும் பொழுது ,அவரது குஷ்ட நோய் நீங்கியிருந்தது .ஞானம் பெற்றார் .                                                                               பல நோயாளிகளிடம் ,இந்த தந்திரத்தை பயிற்சி செய்ய சொல்லியிருக்கிறேன் .குறிப்பாக ,பித்த நோய்  என்று அழைக்கப் படும் ,அதி குருதி அழுத்தம் ,நீரிழிவு ,தோல் நோய் உள்ளவர்கள் .இந்த தந்திர யோகம் மிக சிறப்பாக ,இருதய துடிப்பின் ,அளவை சம நிலையில் வைக்கிறது .தோல் நோய்களில் சிறப்பான முன்னேற்றம் ,பழக,பழக  நோய் நிலையிலிருந்தே விடு படுகிறார்கள் .சிலருக்கு தொண்டை வலி  ;சுவாமிஜி  கரிசாலை சாறு +சுத்த நெய்  சம அளவு எடுத்து ,காய்ச்சி ,வலது பெரு விரலில் தொட்டு  ,தினமும் காலை எழுந்த உடன் ,அண்ணாக்கில் தேய்த்து விடக் கூறினார் .அனுபவியுங்கள் ,பதில் உரையுங்கள் ,மருத்துவ நண்பர்களே ! 

குஷ்டம் போக்கும் -முருக கடவுள் தந்திரம் -அருணகிரி நாதருக்கு உபதேசித்தது !

பொதுவாகவே, சித்த மருத்துவ நண்பர்களுக்கும் ,யோகம் பயிலும் ஆன்மீக நண்பர்களுக்கும் , உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப் பற்றிய பாடங்கள் தெரிந்து இருக்கும் .ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் ,தமிழ் மொழியில்  ஒரு வித்து  சொல் கொடுக்க பட்டிருப்பதும் ,நாம் அறிந்ததே !ஆனால் தற்கால சித்த  மருத்துவர்கள் ,இந்த ஆதார வித்து சொற்களை ,தங்கள் மருத்துவ பயன் பாட்டிற்கு,பயன் படுத்துகிறார்களா !என்று பார்த்தோமானால்  இல்லை என்றே கூற வேண்டும் .நானும் அவ்வாறே தெரிந்து கொள்ளாத காலம் இருந்தது.மேற் கண்ட யோகம் ,ஸ்ரீ வித்யா  பூஜையின் போது ஏற்படும் அதிக அளவு வெப்ப தாக்குதலில் இருந்து ,மீள்வதற்காக என் குருவால் உபதேசிக்கப் பட்டது .                                                                                         உதரணமாக மூலாதாரத்திற்கு வித்து" நகாரம்" என்று நமக்கு  தெரியும் .இது ஒரு  மந்திரத்தால் (மந்திரம் -மனதின் திடம் ) செய்யக் கூடிய தந்திர யோகம் .மிக எளிமையானது .வயதானவர்களும் ,நோயாளிகளும் எளிதில் செய்யக் கூடிய ஒரு பயிற்சி .                                                                                                                           ஆறு ஆதாரங்களுக்கு தலைவனாக ,ஆறு முக கடவுளாக சித்தரித்து ,அவனுக்கு வடிவு தந்து ,எல்லா விஷய (சித்த மருத்துவமும் கூட ) ஞானத்தையும்  கொடுக்க கூடியவனாக ,உருவகப் படுத்தி ,மூன்றாவது கண் என்று சொல்லக் கூடிய பீனியல் சுரப்பி அமைந்திருக்கும் இடத்தில் அமர்த்தி ,அந்த சுரப்பி ,தன் சுரப்பை சுரந்து கொண்டு இருக்கும் வரை ,ஒவ்வொரு மனிதனும் குழந்தையாகவே இளமையோடு இருப்பான்! என்பதை உணர்துவதர்க்காகவே முருகனை  குழந்தையாகவே இருத்தி சென்ற சித்தர்களின் திருவிளையாடல்கள் எந்நே!                                                                                          """"""'சொல் அற-சும்மா இரு """"""""-இது அருணகிரி நாதருக்கு ,முருகன் உபதேசித்தது .எந்த நிலையில் உபதேசித்தார் தெரியுமா !அருணகிரி நாதர் காம வேட்கையினால் ,பல பெண்களுடன் களிப்புற்று ,அதன் விளைவாக உடல் முழுவதும் வெப்பு நோய் என்னும் குஷ்ட நோய் தாக்கி துன்புற்று ,மேலும் காம வேட்கை தீராமல் அலைந்த போது ,அருணகிரி நாதரின் மூத்த சகோதரி ,அவரின்  துன்பம் பொறுக்காமல் , தன்னையே உன் காம வேட்கைக்கு பயன் படுத்த கோரியது கேட்டு மனம் வெதும்பி  ,பஞ்ச பூத தலமாம் -தீ பூதத்தின் திருஅண்ணாமலை கோபுர உச்சியில் இருந்து விழும் போது ,உபதேசித்த சொற்கள் அவை .ஒரு ஒற்றுமையை பாருங்கள் .----------------முருகன் -பீனியல் சுரப்பி இடம் (சந்திர மண்டலம்),,அருணகிரிநாதர் -இருதயம் (சூரிய மண்டலம்),,நோய் -குஷ்டம் (வெப்பு நோய்கள் ,தோல் நோய்கள் ),நோய் காரணம் -வெப்ப (பித்த ) அதிகரிப்பு (காரண விழும் இடம் -தீ பூத திரு அண்ணாமலை )                                                                                                                                             தந்திரப்    பயிற்சி:--------------------------------------------------------------------------------------------------------------------------------"""சொல் அற"" -பேசாமல் இருத்தல் .எப்படி ?இங்கே ஒரு சூட்சும நிலை விளக்க படுகிறது .சாதாரண நிலையில் நமது நாக்கானது ,வாயை மூடிக் கொண்டு இருந்தாலும் ,சிறு அசைவுடன் இருக்கும் ,அப்பொழுது ஒலி அலைகள் உருவாகாமல் இருக்க முடியாது .ஆனால் அஸ்வினி முத்திரை என்று சொல்லக் கூடிய ,நாக்கை மேல் நோக்கி உள் மடக்கிய நிலையில் ,அந்த அசைவும் ,உமிழ் நீர் சுரத்தலும் தடுக்க படுவதால் ,ஒலி அலைகள் எழுவது கட்டுப் படுத்த படுகிறது .                                                                                                                             """"""""""""""""""""""""சும்மா இரு """-என்பதன் பயிற்சி நிலை -"சும்"''என்ற ஒலி அலைகளை ,சூரிய மண்டல நடுவில் ,மனதிற்குள்ளாக  உச்சரித்து கொண்டே இருத்தல் ஆகும் .                                                                                                                                       சூரிய மண்டலம் என்பது பற்றிய ஒரு செய்தி ,இந்த தந்திரத்தின் உண்மையை விளக்குவதற்காக இங்கே கூறப் படுகிறது .சிவ பூஜை செய்பவர்களுக்கும் ,சந்தியா வந்தனம் செய்பவர்களுக்கு தெரிந்த விஷயம் இது .                                                 சூரிய மண்டலம் பூஜை முறையில் -அகோர ஹிருதயாய நமக!என்று அந்த இடத்தில்,சுக்கிர விரல் (பெரு விரல்),சூரிய விரல் (மோதிர விரல் )இணைத்து  தொட்டு ,மந்திரம் (மனதின் திடம் )சொல்வார்கள் .                                                                                      பயிற்சியின் விளைவுகள் :------------------------------------------------------------------------------------------------------*சும்  என்ற தமிழ் வித்து சொல் ஒளியை ,தியான முகமாக ,நெஞ்சின் நடுவில் சூரிய மண்டலத்தில் ,தொடர்ந்து எந்த ஒரு சிந்தனையும் இன்றி உச்சரிக்கும் போது ,*ஒலி சிதறல்கள்  தோன்றும் ,தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க ,ஒலி சிதறல்கள் விரியும் .அடுத்த அதி சூட்சும நிலை என்ன தெரியுமா !உங்கள் நாக்கானது,தானாகவே உள் இழுக்க தொடங்கும் .கண்கள் புருவ மத்தியை  நோக்கி இழுக்கப் படும் .உள் இழுக்க ,இழுக்க உங்கள் உள் நாக்கின் மேல் இருந்து சளி போன்ற  ஒரு பொருள் ,கீழிறங்க ஆரம்பிக்கும் .இது நிகழ ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பொறுமையாக இருத்தல் வேண்டும் .இந்த நிலையில் உங்கள் தாடை பகுதியிலிருந்தும் ,சில சுரப்புகள் வழிய ஆரம்பிக்கும் .இவை எல்லாமே சூரிய மண்டலத்தால் உறிஞ்சி கொள்வதை உணர்வீர்கள் .                                                                                                                                       இந்த யோகதிலிருது அருணகிரி நாதர் விழிக்கும் பொழுது ,அவரது குஷ்ட நோய் நீங்கியிருந்தது .ஞானம் பெற்றார் .                                                                               பல நோயாளிகளிடம் ,இந்த தந்திரத்தை பயிற்சி செய்ய சொல்லியிருக்கிறேன் .குறிப்பாக ,பித்த நோய்  என்று அழைக்கப் படும் ,அதி குருதி அழுத்தம் ,நீரிழிவு ,தோல் நோய் உள்ளவர்கள் .இந்த தந்திர யோகம் மிக சிறப்பாக ,இருதய துடிப்பின் ,அளவை சம நிலையில் வைக்கிறது .தோல் நோய்களில் சிறப்பான முன்னேற்றம் ,பழக,பழக  நோய் நிலையிலிருந்தே விடு படுகிறார்கள் .சிலருக்கு தொண்டை வலி  ;சுவாமிஜி  கரிசாலை சாறு +சுத்த நெய்  சம அளவு எடுத்து ,காய்ச்சி ,வலது பெரு விரலில் தொட்டு  ,தினமும் காலை எழுந்த உடன் ,அண்ணாக்கில் தேய்த்து விடக் கூறினார் .அனுபவியுங்கள் ,பதில் உரையுங்கள் ,மருத்துவ நண்பர்களே ! 

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஆயுளை நீடிக்கும் அற்புத தந்திர யோகம் -விஞ்ஞான பைரவ தந்திரம்

  • யோகத்தின் -காரண சாதனங்கள்  இரண்டாக, சித்தர்கள் தங்கள் நூல்களில் ,வழி மொழிகிறார்கள் .ஒன்று மந்திரப் பிரயோகத்தின்  மூலம் தூண்டுதல்,மற்றொன்று  தந்திர பிரயோகத்தின் மூலம் தூண்டுதல் .அப்படி ஆயுளை நீடிக்கும் ஒரு எளிமையான தந்திர பயிற்சி இது .                                                                                                                        திரு மூலரின் ,இந்த பாடலை கவனியுங்கள் ,                                                                                                            "ஏற்றி இறக்கி இரு காலும்பூரிக்கும் -                                                               காற்றை பிடிக்கும்  கணக்கு அறிவாரில்லை  ..........                                             காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு -                                                          கூற்றை  உதைக்கும் குறி அதுவாமே!                                    -இங்கே                  ..............................................................................................................................................................திரு மூலர் ,அட்ட மா  யோகத்தின் ,நான்காவது  படி நிலையான ,பிராண யாமம் என்னும் ,மூச்சு பயிற்சியின் நுட்பத்தை சொல்கிறார்.இதை பயிற்சி செய்வதகு ,முறையான  உரை நடை இல்லை .இதற்கான எளிமையான பயிற்சி ,அதே    சித்தர்களால் ,விஞ்ஞான பைரவ தந்திரம் என்ற நூலில் ,சிவன் -சக்திக்கு  உபதேச  உரையாக ,காணப் படுகிறது .                                   .......சித்தர்களின் உயிர் விளையாட்டு நுட்பம் ,அதை கையாண்ட விதம் ,அறிவியல் பூர்வமானது ,என்பதை இதன் மூலம் அறியலாம் .                                                                                                             ......................................................................................................................................தந்திரம் பயிற்சி -                                                                                                                 ............................மிக முக்கியமான ,குருப்பிடத்தக்க   விஷயம் ,இந்த பயிற்சிக்கு ,ஆசனம் ,இடம் ,கருவி  எதுவும்  தேவையில்லை .      1.உயிர் வாழும் எல்லா உயிர்களுக்கும் ,பிராணன்  என்னும்  மூச்சு காற்று நாசியின் வழியாக -உள் இழுக்க பட்டும் , வெளியேற்ற பட்டும் கொண்டு இருக்கிறது .                                                                     ......................................................................................................................................2.தந்திரம்  சொல்வது என்னவென்றால் , உள் இழுத்தல் ,வெளியேற்றல்  என்ற  இரண்டு செயல்களுக்கு நடுவே ,உள் செல்லும் காற்று ,சில நொடிகள் (காலம்  ) ,உள் நின்று வெளி செல்வது ,நாம் கவனிக்காத ஒரு விஷயம் .                                              ......................................................................................................................................3.உள் நிற்கும் -அந்த இடத்தில், மனதை ஒரு முக படுத்தி ,தியானிக்க முயற்சி  செய்ய சொல்கிறார்கள் .இங்கே ஒரு விஷத்தை ,நினைவு கூற விரும்புகிறேன் . தியானம் செய்வது எப்படி ? என்ற வினா  எழலாம்.                                                                       ......................................................................................................................................4.அட்ட மா யோகத்தின்  படி நிலைகளில் ,முதல் ஐந்து பிரிவுகளான ,இயமம் ,நியமம் ,ஆசனம் ,பிராணயாமம் ,பிரத்தி ஆகாரம்   ஆகியவை ,புற யோகம்  என்று  அழைக்க படுகிறது ......................................................................................................................................5.தாரணை ,தியானம் ,சமாதி -இது மூன்றும்  அக யோகம் என்றும் ,புற யோகமும் ,அக யோகமும் -தங்களுக்குள் ஒன்றுக்கொன்று  தொடர் புடையது ,என்று யோகா நூல்கள் கூறுகின்றன.                 ......................................................................................................................................6.மேலும் ,   12 அல்லது 16  தாரணை (ஒன்றையே  நினைப்பது  என்று பொருள் )-ஒரு தியானம்  என்றும் ,16 தியானம் -ஒரு சமாதி ,எனவும் கூற படுகிறது .                                                                       ......................................................................................................................................தந்திர பயிற்சியின் விளைவுகள் :                                                                                       1.தியானம் பயிலும் போது ,நினைவுகள் அலைகழிக்க படுவது இயற்கை .உதரணமாக  பயிற்சியில் ஈடு படும் போது ,நமது மனம் ,இறந்த கால நினைவுகளான ,சில விசயங்களை  அசை போடும் .அவற்றை நீக்கும் ,வழி முறையே -16  முறை  தாரணை என்றும் , ஒன்றை பற்றிய ,தொடர் நினைவே  தியானம் என்று ,கூற படுகிறது .ஒரு முறை தவறினாலும் ,தொடர்பு அற்று போகிறது .இப்பொழுது  நிகழும் தியான விளைவுகளை ,சித்தர்கள்  கீழ் கண்டவாறு,வரிசை படுத்துகிறார்கள் .     ......................................................................................................................................2.தியானம் -கண்களை மூடிக்கொண்டோ ,திறந்து கொண்டோ ,செய்யலாம் .நீண்ட பயிற்சியில் ,கண்களை மூடாமல் செய்யலாம் .                                                                                                           ......................................................................................................................................3.தியானிக்கும்  இடத்தில் முதலில் சில ஒளி சிதறல்கள் தோன்றுமாம் .  நேரம் கடக்க ,கடக்க ஒளி  சிதறல்கள்  விரிவடைய தொடங்குமாம் ,அதன் பிறகு நடக்குமாம் சூட்சுமம் .......................................................................................................................................4.உங்களின்  மூச்சு காற்று ,ஒளி விரிய ,விரிய -   ஒரே  சீராக ஆழமாக இழுக்க படுவதை ,உணர்வீர்கள் .அவ்வாறு  இழுக்க படும் ,காற்றை  கவனித்தீர்கள்  என்றால்,அது ஒவ்வொரு  ஆதாரமாக  கடந்து  மூலாதாரத்தை ,அதாவது ,அடி வயிறு  வரை  இழுக்க படுவதை ,கவனிக்கலாம்  என்று சித்தர்கள் கூறுகிறார்கள் .இதோடு முடிந்து விட்டதா !என்று நினைதொமானால் ,அடுத்த அதி சூட்சும  நிலையை  விளக்குகிறார்கள் .                                                                                               ......................................................................................................................................5. மிக முக்கியமான  பயிற்சி நிலை இதுதான் !   ஒரு பயிற்சியின் மிக நுட்பமான முடிவு நிலை-உங்களின் மூச்சு காற்று,உண்மையிலயே மூலாதாரத்தை  தொடும் போது ,ஒரு அற்புதம் நிகழும் !-உங்களுடைய  எந்த ஒரு தூண்டுதலோ ,சுய முயற்சி இல்லாமலே ,உங்கள்  மல துவாரம்(anal oriface)  தானாக  உள் நோக்கி சுருங்கி ,மூச்சு காற்றை முத்தமிடுவதை  உணர்வீர்கள் !. பிராண,அபானன்  ஒன்றுகொன்று  கலப்பதை  காண்பீர்கள் !                                                                                                                            ..............................................................................................................................................................இந்த பயிற்சியின் போது, வெறும் வயிற்றில் செய்வது நல்லது ,அஸ்வினி  முத்திரை பயன் படுத்தினால் ,நீங்கள் செய்கின்ற யோகம் ,சரிதானா !என்று சரி பார்க்கலாம் . எப்படி?                                         ......................................................................................................................................நாக்கை உள் நோக்கி மடித்து கொண்டு ,இந்த தந்திர யோகம் பயிலுங்கள் ,யோகம் சித்தியானால் ,பயிற்சியின் போது ,நாக்கானது தொண்டையை நோக்கி ,உள் இழுக்க படும் .கண்கள் தானாகவே  மேல்  நோக்கி இழுக்க பட்டு ,புருவ மத்தியை நோக்கி செல்லும் .......................................................................................................................................................நண்பர்களே !சித்தர்களின் ஒரு அறிவியல் கால கணக்கு   உங்களுக்காக -------மனிதர்களுக்கு சுவாச  செலவு  ஒரு நாளைக்கு -21600  சுவாசமாம் .இயற்கையின் படி ,உங்கள் ஆயுள் 80  வருடம் எனில் ,யோகா பயிற்சியின் மூலம்,உங்கள்  சுவாசத்தை ,ஒரு நாளைக்கு ,பாதியாக  குறைத்து ,அதாவது 10800      சுவாசமாகினால் ,உங்கள்  ஆயுள்  நாற்பது  வருடம் இயல்பாகவே  கூடி ,120  வருடம் என்று ஆகி விடும் .என்னே! நம் சித்த அறிவியல் !

சனி, அக்டோபர் 29, 2011

குரு வணக்கம்

எங்கெங்கோ ,எப்படியோ ,இலக்கில்லாமல்  சுற்றி திரிந்த ,என்னையும் ,என் மனதையும் ,வா வென்று  அழைத்து ,அடைக்கலம் கொடுத்து ,அறிவுப் பால் ஊற்றி ,யோக நெறியில்  ஞான  பசியை தூண்டிய,கொடுவிலரபட்டியில் உறையும், குரு -ஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள்  திருவடி பணிந்து ,நடை முயல்கிறேன் .                       குரு மொழி -ஞானத்திற்கு  எதற்கடா!வேடம் ?                                                                                       .......................அதற்கு ஏதடா!சுமை !