வியாழன், ஜனவரி 24, 2013

மகா பூரணாதி .......சிவ தாண்டவம் -

மகா பூரணாதி .......சிவ தாண்டவம் -                                                     .                                                                                                                            பின் பக்கம்  பார்த்துக் கொண்டே ,முன் பக்கம்  நடப்பது  என்பது எவ்வளவு சிரமமோ ,அவ்வளவு சிரமம் -சித்தனையும் ,சித்த மருத்துவத்தையும் புரிந்து கொள்வது என்பது ......... எல்லா சித்தர்களும் தம் மொழி நடையில் ,ஒரு பொது மரபை வைத்திருந்தார்கள் -அதன் பேர் "சாடுதல் ",எல்லா விதமான வசவு சொற்களும் ,அவர்கள் பாடிய பாடல்களுக்கு இடையில் ,மிக சரளமாக வந்து கொண்டும் ,மனித நிலையில் ஏற்படும் எல்லா உடல் அனுபவங்களின் ,மன அனுபவங்களின் தொகுப்பாகவே அந்த எல்லா பாடல் சொற்களும் ,தமக்குள் உரையாடிக் கொண்டே  இருக்கும் -செயல்களையும் ,செய்கைகளையும் -தமிழ் சொல் வடிவில் ,மிக எளிமையாக ,மலர்களை  அள்ளி அள்ளி வீசுவது போல் ,வீசி விட்டு செல்வது அவர்களின் பணியாக இருந்திருப்பதை ,அவர்களின் பாடல்களை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடியும் ,தற்கால  தமிழ் கொலை களத்தில் ,அவர்களின் அறிவு மனம்  -மணம் வீசாமல் மலிந்து கிடப்பதற்கு ...............என்ன காரணம் என்று தெரிய வில்லை ...தொடர்ந்து பயணிப்போம் ........................................................................................................................................................................ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக